கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் குற்றச் செயல்கள் :களமிறக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படை
Sri Lanka Police
STF
Crime
Ananda Wijepala
By Sumithiran
இலங்கை முழுவதும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள 52 காவல் நிலைய பகுதிகளை காவல்துறை அடையாளம் கண்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால(ananda wijepala) இன்று(20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து சட்ட அமலாக்க அதிகாரிகள் தற்போது கலந்துரையாடி வருவதாக அவர் கூறினார்.
சிறப்பு அதிரடிப்படை குழுக்கள்
பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தப் பகுதிகளில் 15 சிறப்பு அதிரடிப்படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்குறிப்பிட்டார்.
நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்