கொடிகளை அறுத்து எறிந்த காவல்துறை: தரவை துயிலுமில்லத்தில் அராஜகம்(படங்கள்)
மட்டக்களப்பு - தரவை துயிலுமில்லத்தில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
கார்த்திகை 27ஆம் திகதியான இன்று உரிமை கோரிய யுத்தத்தில் உயிர் நீத்த வீரமறவர்களை நினைவுகூர்ந்து வடக்கு - கிழக்கு தாயக பகுதிகளில் அஞ்சலி நிகழவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில், மட்டக்களப்பு - தரவை மாவீரர் துயிலும் இல்லத்தின் அஞ்சலி நிகழ்வின் இடையே உட்புகுந்த காவல்துறையினர் அஞ்சலி நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
கொடிகளை அறுத்து எறிந்த காவல்துறை
இந்தநிலையில், அங்கு ஒன்று திரண்டிருந்த மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்டோருக்கும் காவல்துறையினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
துயிலுமில்லத்திற்கு சப்பாத்து கால்களுடன் உள்நுழைந்த காவல்துறையினர், அங்கு கட்டப்பட்ட கொடிகளை அறுத்து எறிந்ததுடன், தீபங்களையும் பிடுங்கி எறிந்தனர்.
மாவீரர்களுக்கு அஞ்சலி
காவல்துறையினரின் இந்த அராஜக செயற்பாட்டை எதிர்த்து மக்கள் கூக்குரலிட்டபோதும், நிகழ்வினை குழப்பும் நடவடிக்கை காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், காவல்துறையினரின் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.