யாழ்ப்பாணத்தில் இளைஞனை தாக்கிய காவல்துறை : ஆரம்பமானது விசாரணை
அச்சுவேலி காவல்துறை உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து அவரது வாக்குமூலம் இன்று(01) தம்மால் பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.
சுன்னாகம் காவல்துறையினரும் தாக்குதல்
இதேவேளை சுன்னாகம் காவல்துறையினரால் கைதுசெய்ப்பட்ட நபரொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்ற கட்டளையின் பேரில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபரது வாக்குமூலம் தம்மால் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று பதிவுசெய்யப்பட்டதுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்