யாழ். உள்ளிட்ட வடக்கில் வாடகை வாகனப் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Crime
By Thulsi Aug 19, 2026 03:57 AM GMT
Report

வாடகை வாகனங்களை பயன்படுத்தும் பயணிகள், தங்களைக் கடத்தல், கொள்ளை மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

வடக்கில் மயக்க மருந்து கலந்த உணவுகளைக் கொடுத்து பயணிகளை மயக்கமடையச் செய்து குற்றச் செயல்கள் நடப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

வாகனத்தின் பதிவு 

அவர் மேலும் தெரிவிக்கையில், பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன், வாகனம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வாகனத்தின் பதிவு எண், ரகம் மற்றும் ஓட்டுநரின் பெயரைச் சரிபார்க்க வேண்டும்.

யாழ். உள்ளிட்ட வடக்கில் வாடகை வாகனப் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை | Police Issue Safety Advice To Taxi Passengers

குறிப்பாக இரவில் பயணிப்போர், தங்களது தொலைபேசி அல்லது கூகுள் வரைபடம் மூலம் தங்களது நேரலை இருப்பிடத்தைக் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இலக்கை அடையும் வரை அவர்கள் உங்களைக் கண்காணிப்பதை உறுதிசெய்ய வேண்டும். இரவு நேரப் பயணங்களின் போது, ஓட்டுநர் அறிமுகமில்லாத, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது எதிர்பார்க்காத பாதைகளில் செல்ல முயன்றால் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அநுர அரசுக்கு ரணிலிடம் இருந்து பறந்த எச்சரிக்கை

அநுர அரசுக்கு ரணிலிடம் இருந்து பறந்த எச்சரிக்கை

காவல்துறையின் அவசர உதவி 

பயணத்தின் போது முகம் தெரியாத நபர்கள் வழங்கும் உணவு, பானங்கள் அல்லது தண்ணீரைக் கண்டிப்பாக உட்கொள்ளக் கூடாது. மயக்க மருந்து கலந்த உணவுகளைக் கொடுத்து பயணிகளை மயக்கமடையச் செய்து குற்றச் செயல்கள் புரிவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

யாழ். உள்ளிட்ட வடக்கில் வாடகை வாகனப் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை | Police Issue Safety Advice To Taxi Passengers

பயணத்தின் போது பணம், மடிக்கணினி, கைத்தொலைபேசி மற்றும் நகைகள் போன்ற விலைமதிப்பற்ற பொருட்களைப் பிறருக்குத் தெரியும் வகையில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பயணத்தின் போது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை ஏற்பட்டாலோ அல்லது அச்சுறுத்தலை உணர்ந்தாலோ, உடனடியாகக் காவல்துறையின் அவசர உதவி எண்களான 119 அல்லது அவசர தகவல் சேவையான 118 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு, வாகனம் மற்றும் சம்பவம் குறித்த விபரங்களை வழங்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வாகன ஓட்டுநர்களுக்கும் பொருந்தும் என நினைவூட்டியுள்ள காவல்துறை, பயணிகளை அழைத்துச் செல்லும்போது முறையான நடத்தைப் விதிகளைப் பின்பற்றுமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச மாநாடு...! அனைத்துத் தரப்பினருக்கும் அவசர அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச மாநாடு...! அனைத்துத் தரப்பினருக்கும் அவசர அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022