பொதுமக்களிடம் விசேட கோரிக்கையை முன்வைத்துள்ள காவல்துறை!
Police
Ajith Rohana
Special Request
Sri Lankan Economic Crisis
Srilankan Protest
By Kanna
எரிபொருளை கொண்டு செல்லும் பாரவூர்திகளுக்கு சேதத்தை ஏற்படுத்தவோ அல்லது இடையூறு ஏற்படுத்தவோ வேண்டாமென காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இந்த கோரிக்கையை முவைத்துள்ளார்.
இதேவேளை, நேற்று றம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின்போது எரிபொருளைக் கொண்ட தாங்கி ஊர்தியொன்றுக்கு ஒரு குழுவினர் தீ வைக்க முற்பட்டதைத் தடுக்க காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகிக்க வேண்டியேற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனால், எரிபொருளை தாங்கி செல்லும் பாரவூர்திகளுக்கு எந்த விதத்திலும் சேதம் விளைவிக்க வேண்டாம் என காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி