தேசத் தந்தையை பாதுகாக்க சிங்கள மக்கள் ஏன் கிளர்ந்தெழவில்லை?
தேசத்தை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டதாக இதுநாள்வரை பெருமை பேசி வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பிலிருந்தே துரத்தப்பட்டுள்ளார் என்றுதான் கூறவேண்டும் என பேசிக் கொள்கின்றனர் பலர்.
இவ்வாறு அரசாங்கத்தினால் வெளியேற்றப்பட்ட தேசத்தை பாதுகாத்த தந்தையை மீட்க சிங்கள மக்கள் ஏன் கிளர்ச்சி செய்யவில்லை என்பது வியப்பாக உள்ளது எனவும் கூறுகின்றனர் அவர்கள்.
பயங்கரவாதம்,புலம்பெயர் தமிழர்கள்,தேச பாதுகாப்பு என இதுநாள்வரை பூச்சாண்டி காட்டி இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இந்த நாட்டை தனது கைக்குள் வைத்திருந்த ஒரு தலைவருக்கு இன்று அரசியல் செய்ய தலைநகரில் ஒரு இடம் இல்லை. இன்று தனது சொந்த இடமான ஹம்பாந்தோட்டைக்கு குடிபெயர்ந்து விட்டார் அவர்.
சிங்கள மக்களை தனது கைக்குள் எப்போதும் மேற்சொன்னவிடயங்களை காட்டி இவற்றின் மூலம் புலி வரப்போகிறது என்று கூறி ஆட்சியும் அதிகாரத்தையும் அரச சுகபோகங்களையும் ஆண்டு வந்த அவருக்கு அரசாங்கம் சட்டமியற்றிய பின்னர்தான் வெளியேற வேண்டும் என்ற நினைப்பு வந்து வெளியேறுவதாக அறிவித்த போதிலும் எங்கே போயினர் அவரை ஆட்சிக்கட்டிலில் ஏற்றிய சிங்கள மக்கள்?என கேட்கின்றனர் அவர்கள்
ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்தபோது இந்த நீதிமன்ற உத்தரவையும் மதிக்காது ஒன்று சேர்ந்த எதிரணிகள் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக தமது ரணில் விசுவாசத்தை காட்டிய போதிலும் மகிந்த வெளியேறிய போது ஏன் காட்டவில்லை என கேட்போரும் உள்ளனர்.
இதற்குத்தான் தமிழ் பழமொழி ஒன்று உள்ளது. அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும் என்று.
இது முன்னாள் அரச தலைவர் மகிந்தவிற்கும் பொருந்துமோ என சிலர் கேட்பதிலும் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது.
