யாழில் பலாலி காவல்துறையினரின் அட்டகாசம்: எல்லையைத் தாண்டி மக்கள் மீது தாக்குதல்

Sri Lanka Police Jaffna Law and Order
By Kajinthan Feb 09, 2026 10:11 PM GMT
Report

யாழ்ப்பாணம் - சுன்னாகம் காவல் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன், ஈவினை பகுதியில் பலாலி காவல்துறையினர் எல்லை தாண்டி வந்து மக்களுடன் வன்முறையில் ஈடுபட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இலஞ்சம் பெறுவதற்காகவே இவ்வாறு எல்லை தாண்டி வருவதாகவும், சம்பவத்தின் போது காவல்துறையினர் மதுபோதையில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்களால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இது குறித்துத் தெரிவிக்கையில், "நான் எனது வயலுக்கு அருகாமையில் உள்ள எனது காணியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தேன்.

2026 விமான நிலைய விரிவாக்கங்கள்: உலகளாவிய போக்குவரத்தின் புதிய பரிமாணம்

2026 விமான நிலைய விரிவாக்கங்கள்: உலகளாவிய போக்குவரத்தின் புதிய பரிமாணம்

மதுபான நிலையம் 

அப்போது எனது காணிக்குள் அத்துமீறி நுழைந்த பலாலி காவல்துறையினர், நான் மதுபோதையில் இருப்பதாகத் தெரிவித்து முரண்பட்டதுடன், எனது ஆடையைக் கிழித்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதன்போது நான் ஊர்மக்களைத் துணைக்கு அழைத்தவேளை, அவ்விடத்தில் நின்ற காவல்துறையினர் பலாலி காவல் நிலையத்திற்கு அழைப்பு மேற்கொண்டு ஏனைய காவல்துறை உத்தியோகத்தர்களையும் அந்த இடத்திற்கு வரவழைத்தனர்.

யாழில் பலாலி காவல்துறையினரின் அட்டகாசம்: எல்லையைத் தாண்டி மக்கள் மீது தாக்குதல் | Jaffna Palaly Police Violence Punnalaikkadduwan

இதன்போது ஏனைய காவல்துறையினரும் அவ்விடத்திற்கு வந்து அட்டகாசம் செய்த வேளை, நாங்கள் அதனைக் காணொளியாகப் பதிவு செய்ய முற்பட்டபோது எங்களைக் காணொளி பதிவு செய்ய விடாமல் தடுத்தனர்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்குச் சற்று தொலைவில் ஒரு மதுபான நிலையம் உள்ளது.  

கனடாவில் பட்டப்பகலில் சுட்டுகொல்லப்பட்ட இந்தியர்...! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

கனடாவில் பட்டப்பகலில் சுட்டுகொல்லப்பட்ட இந்தியர்...! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

காவல்துறை உத்தியோகத்தர் 

அங்கு மதுபானம் பாவித்துவிட்டு வருபவர்களிடம் இலஞ்சம் பெறுவதற்காகப் பலாலி காவல்துறையினர் எல்லை தாண்டி வீதியில் வந்து நிற்பது வழமை.

இவ்வாறான பின்னணியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. "இனிமேலும் பலாலி காவல்துறையினர் இவ்வாறு எல்லை தாண்டி வந்து எமக்குத் தொந்தரவு செய்யக்கூடாது.

யாழில் பலாலி காவல்துறையினரின் அட்டகாசம்: எல்லையைத் தாண்டி மக்கள் மீது தாக்குதல் | Jaffna Palaly Police Violence Punnalaikkadduwan

இதற்கு உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தகட்டு இலக்கமோ அல்லது பெயர்ப்பட்டியோ அணிந்திருக்கவில்லை என்பதுடன், மற்றைய காவல்துறை உத்தியோகத்தர் கைபேசி மூலம் தகட்டு இலக்கத்தை மறைத்திருந்ததை அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

சிட்னியை உலுக்கிய பலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: இஸ்ரேலிய ஜனாதிபதிக்கு கடும் எதிர்ப்பு

சிட்னியை உலுக்கிய பலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: இஸ்ரேலிய ஜனாதிபதிக்கு கடும் எதிர்ப்பு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019