அநுரவின் கையில் சிக்கிய வன்னிச் செல்வந்தரின் ஜாதகம்...!
ஊழல்வாதிகள் எல்லோரையும் கையும் களவுமாகப் பிடிப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அநுர சுற்றிக்கொண்டிருக்க, இப்போது வன்னிச் செல்வந்தரின் வரவு - செலவு கணக்குகளும் அவர் கைக்கு வந்து சேர்ந்திருப்பதுதான் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்.
இத்தனை காலமா வன்னியில் கோட்டையைக் காத்துக்கொண்டிருந்த வன்னிச் செல்வந்தரின் ஜாதகக் கோப்புகள் இப்போது அநுரவிடம் போனதால், “என்ன வன்னிச் செல்வந்தரே... இவ்வளவு செல்வம் சேர்த்திருக்கீங்க ?" என்று அநுர கேட்கப்போகும் கேள்வியை நினைத்தால் இப்போதே வயிறு குலுங்கச் சிரிக்கத் தோன்றுகிறது.
மன்னார் காற்றாலை விவகாரம் முதல் ஆக்கிரமிப்பு நிலங்கள் வரை வன்னிச் செல்வந்தரின் பெயரில் பல கைவரிசைகள் கிளப்பப்படும் நிலையில், இந்தக் கோப்புகள் அநுரவின் கிளீனிங் மெஷினுக்குள் (Investigation) போனால் ன்னிச் செல்வந்தர் தப்பிப்பாரா அல்லது வெளுத்து எடுக்கப்படுவாரா என்பதுதான் தற்போதைய மில்லியன் டொலர் கேள்வி.
முன்னால ஜனாதிபதிகளுக்கெல்லாம் ஆதரவு கொடுத்து ஜாலியா இருந்த காலம் போய், இப்ப கணக்கு கேட்கிற ஒருத்தர் முன்னால நிக்கணுமே என்கிற கவலையில் வன்னிச் செல்வந்தரிடம் இருப்பதை நினைத்தால், இதுதான் நம்மட நிகழ்ச்சியின் உச்சக்கட்ட நகைச்சுவை.
“தம்பி வன்னிச் செல்வந்தரே, இதெல்லாம் உங்களோட பைல்தானே ?” என்று அநுர அந்தப் பெரிய கோப்பைக் காட்டும் போது, வன்னிச் செல்வந்தர் “கடவுளே... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே” என்று சொல்லாமல் சொல்லப்போகும் ரியாக்ஷனைப் பார்க்க மக்கள் வெயிட்டிங்.
அதிகமா வெயிட் பண்ணாம வாங்க நம்மட சைக்கிள் கடையில இன்னும் மிச்ச கதைய பார்க்கலாம்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |