மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த காவல்துறை உத்தியோகத்தர் கைது
Sri Lanka Police
Trincomalee
By Sumithiran
மொனராகலை பிரதேச குற்றத்தடுப்பு விசாரணைக் கூடத்தில் கடமையாற்றும் தனது மனைவியான பெண் காவல்துறை கான்ஸ்டபிளை தாக்கி கொலை செய்வதாக மிரட்டல் விடுத்த அவரது கணவரான காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை மொனராகலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.
காவல்நிலையத்தில் முறைப்பாடு
குறித்த பெண் காவல்துறை உத்தியோகத்தர் நேற்று முன்தினம் (17) மொனராகலை காவல்நிலையத்தில் தனது கணவரான காவல்துறை உத்தியோகத்தர் தன்னை கொடூரமான முறையில் தாக்கி கொலை மிரட்டல் விடுப்பதாக செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த அதிகாரி நேற்று மொனராகலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி