காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம் - ஆதரவளித்த காவல்துறை அதிகாரி பணிநீக்கம்
Sri Lanka Police
Go Home Gota
Colombo
By Sumithiran
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த குட்டிகல காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் காவல் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் பணிநீக்கம் செய்யப்படவுள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அவரது அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி காலி முகத்திடலில் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், குறித்த காவல்துறை அதிகாரியும் அவர்களுடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி