போதையில் நடு வீதியில் படுத்துக் கிடந்த காவல்துறை அதிகாரி
Sri Lanka Police
By pavan
மது போதையில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் நடு வீதியில் படுத்துக் கிடக்கும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த சம்பவம் நொச்சியாகம தம்புத்தேகமப் பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
வாகனச் சாரதிகள் கடும் அசௌகரியம்

குறித்த அதிகாரி தான் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டுவிட்டு நடுவீதியில் புரண்டு கொண்டிருந்த காட்சிகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இவரின் செயற்பாட்டால் வாகனச் சாரதிகள் கடும் அசௌகரியங்களை எதிர் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி