மது போதையில் கடமையிலிருந்த அதிகாரிகளை தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர்!
Srilanka
alcohol
Moratuwa
Police Constable
rioting
By MKkamshan
நேற்று இரவு காவல் நிலையத்திற்கு மது போதையில் வந்த காவல்துறை உத்தியோகத்தர், கடமையிலிருந்த அதிகாரிகளை தாக்கி கலவரம் செய்துள்ளாா்.
மொரட்டுவை காவல் நிலையத்திற்கு மது போதையில் வந்த மொரட்டுவ பயிற்சி காவல்துறை உத்தியோகத்தர், கடமையிலிருந்த அதிகாரி ஒருவருடன் முரண்பட்டு அவரை தாக்கியுள்ளாா்.
சம்பந்தபட்ட அதிகாரியை கைது செய்துள்ளதாக மொரட்டுவ காவல் நிலைய உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளாா்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
