காவல்துறை பரிசோதகர் ஒருவரின் அநாகரீக செயல்
இலங்கை நடிகை ஒருவரை துன்புறுதியதாக சந்தேகத்தின் பேரில் காவல்துறை பரிசோதகர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் கடமையாற்றும் காவல்துறை பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குறித்த நடிகை பிலியந்தலை காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகத்திற்குரிய காவல்துறை பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் நடிகை நேற்றிரவு சந்தேகத்திற்குரிய காவல்துறை பரிசோதகர் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டியில் பயணம் செய்துள்ளார்.
அதன்போது, சந்தேகநபர் பிலியந்தலை ஜாலியாகொட பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை நிறுத்தி நடிகையை துன்புறுத்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |