வீதியில் சென்றவரை தாக்கும் காவல்துறை - காரணம் வெளியானது
காவல்துறையைச் சேர்ந்த இருவர் வீதியில் சென்ற ஒருவரைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந் சம்பவம் கேகாலை பிரதேசத்தில் நடத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான நபர் கேகாலையில் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருளுக்கு அடிமையான ஹபுதுகல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரான இவர், காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்ய வந்திருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
இதேவேளை காவல்துறை உத்தியோகத்தரால் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்தி குறித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறைமா அதிபரினால் சப்ரகமுவ பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபருக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த காவல்துறை உத்தியோகத்தர் அவசியமற்ற முறையில் அதிகாரத்திற்கு அப்பால் செயற்பட்டுள்ளமை போன்று தென்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.