சிங்கப்பூர் நாட்டவர் ஏமாற்றி பணம் பறித்த காவல்துறையினருக்கு நேர்ந்த கதி
சிங்கப்பூர் நாட்டவர் ஒருவரிடமிருந்து லஞ்சம் பெற்ற மூன்று காவல்துறை அதிகாரிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்போது, பம்பலப்பிட்டி காவல்துறையில் பணியாற்றும் ஒரு காவல்துறை சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் சாரதி ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்துக்குரிய அதிகாரிகள், சிங்கப்பூர் நாட்டவரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மின்னணு சிகரெட்டுகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் தவிர்க்க, அவரிடமிருந்து ரூ.40,000 கேட்டு பின்னர் ரூ.30,000 பறித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
முறைப்பாடளித்த அளித்த சிங்கப்பூர் நாட்டவர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, காவல்துறை அதிகாரிகள் முச்சக்கர வண்டியை நிறுத்தி அவரின் பயணப்பொதிகளை சோதனை செய்துள்ள நிலையில் குறித்த சிகரேட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில், காவல்துறை அதிகாரிகள் சிங்கப்பூர் நாட்டவரிடம் இதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால், அவர் ரூ.50,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறி, அவரிடமிருந்து 40,000 பணத்தைக் கேட்டு அதிலிருந்து 30,000 ரூபாவை பறித்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |