சட்டவிரோத பண விவகாரம்! யாழில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka Police Investigation
By Kajinthan
சட்டவிரோதமான முறையில் பணத்தை ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் சுன்னாகம் காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவரை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் திலக் தனபாலவின் ஆலோசனைக்கமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
ஒரு தொகை பணம்
குறித்த இருவரிடமும் சந்தேகிக்கப்படும் அளவிற்கு ஒரு தொகை பணம் காணப்பட்டதால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த இடமாற்றத்திற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இடமாற்றம் செய்யப்படும் இருவரும் விரைவில் நெடுந்தீவு காவல்துறை நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள் என அறியமுடிகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி