போதைப்பொருள் பயன்படுத்திய காவல் நிலையப் பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம்
Sri Lanka Police
Badulla
Drugs
By Jaso
பதுளை பிரிவில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் ஒருவர், போதைப்பொருள் பயன்படுத்தியது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முதற்கட்ட விசாரணைக்கு உட்பட்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பணியின் போது போதைப்பொருள் பயன்படுத்திய தகவலை உறுதி செய்வதற்காக, அவர் 2ஆம் திகதி தானாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டதாக ஒரு சிரேஷ்ட காவல் அதிகாரி தெரிவித்தார்.
மருத்துவ பரிசோதனையில் உறுதி
அந்தப் பரிசோதனையின் போது, சிறுநீர் மாதிரிகளில் போதைப்பொருள் கண்டறியப்பட்டது. பதுளை போதனா மருத்துவமனையின் தடயவியல் மருத்துவர் தனது அறிக்கையில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி