சிறிலங்கா நாடாளுமன்றிற்குள் இரத்தக்கறையுடன் பிரவேசித்த எதிர்க்கட்சி!
police
protest
opposition
Srilankan parliment members
Rambukkana police opened fire
By Kalaimathy
றம்புக்கனையில் நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய (20) நாடாளுமன்ற அமரவில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இரத்தக்கறை படிந்த ஆடையுடன் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.
அதன் போது இரத்த வெறி வேண்டாம் போன்ற வாசகங்களை ஏந்தியவாறு தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாலேயே நாடாளுமன்ற அமர்வில் எதிர் கட்சி தலைமையில் இவ்வாறான எதிர்ப்புக்கள் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி