பட்டப்பகலில் ஐவர் சுட்டுக்கொலை : இவர்களை தெரியுமா..!
பெலியத்த பிரதேசத்தில் கடந்த ஜனவரி 22ஆம் திகதி 5 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பெலியத்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களில் ஒருவர் அம்பலாங்கொடை, கஹாவ, வாரகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதான 'சூட்டிய' என அழைக்கப்படும் மஹகமகே தினேஷ் பிரியங்கர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மூவர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள்
மற்றுமொரு சந்தேகநபர் அங்குருவெல்ல யாய 4 தம்புத்தேகம மற்றும் கல்பத்த பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நிஷாந்த சமன் குமார டயஸ் எனவும், மூன்றாவது சந்தேகநபர் 41 வயதான ரன்முனி மகேஷ் ஹேமந்த சில்வா, மாகந்தானை, புவக்கஹவத்தையைச் சேர்ந்தவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர்களின் இருப்பிடம் குறித்து தகவல் அறிந்தவர்கள் தங்காலை பிரிவின் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் 071-8591488 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது OIC பெலியத்த 071-859497 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஐவர் சுட்டுக்கொலை
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த மாற்றுப்பாதைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எங்கள் மக்கள் கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் உயிரிழந்தனர். முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக பல சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |