முல்லைத்தீவு குருந்தூர் விகாரைக்கு மீண்டும் காவல்துறை பாதுகாப்பு
Sri Lanka Police
Mullaitivu
Hiniduma Sunil Senevi
By Jaso
முல்லைத்தீவு குருந்தூர் ரஜமகா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
விகாரையில் அகற்றப்பட்ட காவல்துறை பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரரினால் அமைச்சுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் அறிவிப்பு
இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், விகாரைக்குத் தேவையான காவல்துறை பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, விகாராதிபதி தேரருக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை ஒடுக்குகிறதா அரசு? 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்