காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் தீர்வுகளை புறம் தள்ளும் இலங்கை அரசு! வெளியாகிய அறிக்கை
டிசம்பர் 2010 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் தீர்மானம் 65/209 இன் கீழ் நிறுவப்பட்டு, ஆகஸ்ட் 30 அன்று உலகளாவிய சமூகத்தால் அனுசரிக்கப்படவிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சர்வதேச தினத்தை நோக்கி உலகம் நகரும் வேளையில், ஈழத்தமிழ் மக்கள் இன்னும் நீதி கிடைக்காமல் தொடர்ந்தும் போராடி வருகின்றோம் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 இல் போர் முடிவடைந்து 17 ஆண்டுகளுக்கு மேலாகியும், இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதில் எவ்வித குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை என இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நிலையில், அதில் மேலும் சில விடயங்களை பின்வருமாறு மையப்படுத்தியுள்ளது,
“பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் இன்னும் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் உள்ளதோடு, அவர்கள் இலங்கை அரசுப் படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இப்பகுதி முழுவதும் பல மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசு எவ்வித குறிப்பிடத்தக்க அல்லது நம்பகமான விசாரணைகளையும் மேற்கொள்ளத் தவறிவிட்டதுடன், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட சர்வதேச நடவடிக்கைகளும் பயனற்றதாகவே நிரூபிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வுப் பணி வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இன்றுவரை, கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட 550க்கும் மேற்பட்ட நபர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இது இலங்கையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் மிகவும் கொடூரமான மனிதப் புதைகுழியாக பதிவாகியுள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


