இவரை தெரியுமா..! மக்களின் உதவியை நாடும் காவல்துறை
நிகழ்நிலை மோசடியில் ஈடுபட்டுள்ள ஒரு சந்தேக நபரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
சந்தேக நபர், கடுவெல, 270/6 இஹல போமிரியவைச் சேர்ந்த லியனதுகோரலலாகே டொன் நிரோஷன் சமீர (NIC: 780232196V) என அடையாளம் காணப்பட்டடுள்ளார்.
இவர், பொய்யாக பரிசுப் பொதிகள் வழங்கப்படும் எனக் கூறி பலரை ஏமாற்றி, வங்கி வைப்புகளின் மூலம் பணங்களை மோசடியான முறையில் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
விசாரணைகள்
இந்த நிலையில், சந்தேக நபர் மோசடிக்காக சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகளை வைத்திருந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், இது தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவின் நிதி விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை, விசாரணை தொடர்பான வழக்கு தற்போது கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, சந்தேக நபரின் படத்தை காவல்துறையினர் வெளியிட்டு, தகவல் தெரிந்தவர்கள் 071-8594911 அல்லது 011-2320140 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
