காவல்துறை உத்தியோகத்தரின் அநாகரிக செயற்பாடு : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக கோரிய சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு கல்குடா காவல் நிலையத்தில் கடமையயாற்றிவரும் ஓட்டமாவடியைச் சோந்த காவல்துறை உப பரிசோதகர் ஒருவரை நேற்று சனிக்கிழமை (5) பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கடந்த 2021ம் ஆண்டு திருகோணமலை காவல் நிலையத்தில் கடமையாற்றிய போது ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட போதை பொருள் வியாபாரியை விடுவிப்பதற்கு ஒரு தொகை பணம் மற்றும் அந்த வியாபரியின் மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரியுள்ளார்.
காவல்துறை உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு
இதனை தொடர்ந்து குறித்த வியாபாரி இது தொடர்பாக காவல்துறை உத்தியோகத்தருக்கு எதிராக திருகோணமலை மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வந்தது

இந்த நிலையில் காவல்துறை உத்தியோகத்தர் அங்கிருந்து வாழைச்சேனை மற்றும் கந்தளாய் காவல்துறை பிரிவிலுள்ள காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா காவல் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டு கடமையாற்றி வருகின்ற நிலையில் அவரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்வதாக காவல்துறை தலைமையகம் அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |