காவல்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்ட முன்னாள் எம்.பி கஜேந்திரன்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) காவல்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இன்று (20) பகல் 12.00 மணிக்கு பலாலி காவல் நிலையத்திற்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் காணி
தனியார் காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இராணுவத்தினரின் துணையுடன் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி சட்ட விரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானங்களை அகற்றக் கோரி ஒவ்வொரு பெளர்ணமி நாட்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில், குறித்த போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே பலாலி காவல் நிலையத்திற்கு வருமாறு அழைப்புக் கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 13 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்