பொதுமக்களுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள கோரிக்கை
போலி நாணயத்தாள்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தெரிவிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
போலி நாணயத்தாள்கள் அச்சிடுவது தொடர்பில் தம்புத்தேகம, கிளிநொச்சி (Kilinochchi) மற்றும் எகொடஉயன ஆகிய காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
போலி நாணயத்தாள்கள்
எனவே, போலி நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, சமூக ஊடகங்களில் வெளிவரும் போலி கடிதம் தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இலங்கை காவல்துறையினரோ அல்லது அதனுடன் இணைந்த நிறுவனங்களினாலோ இவ்வாறான கடிதம் எதுவும் வெளியிடப்படவில்லை என பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |