பாரிய அரசியல் மாற்றத்தை நோக்கி நகரும் வடக்கு மக்கள்
வடக்கு அரசியலில் என்றுமில்லாத அளவில் பாரிய அரசியல் மறுசீரமைப்பொன்று வரவுள்ளதாக தொழிலதிபர் துமிலன் சிவராஜா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியில் இடம்பெற்ற சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மற்றும் கிழக்கில் இளைஞர்களுக்கான சரியான தலைமைத்துவத்தை அமைத்துகொடுத்து இளைஞர் சமுதாயத்தை மென்மேலும் வளர்க்க வேண்டும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
யாழ்ப்பாணத்தில் தொழில் முனைவதற்கான வாய்ப்புக்களானது அதிகளவில் காணப்படுகின்ற போதிலும் அதனை ஊக்குவிப்பதற்கான வழிகளை அவர்களுக்கு கற்று தர யாரும் இல்லை.
யுத்தத்தின் காரணமாக விரும்பியோ அல்லது விரும்பாமலோ 30 வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டை விட்டு யாழ் மக்கள் புலம்பெயர நேரிட்டது.
அவ்வாறான சிலரின் நிலங்கள் பராமரிப்பற்று கிடக்கின்ற நிலையில் அவ்வாறு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கு வந்து முதலீட்டை காணும் பட்சத்தில் வடக்கில் பல மாற்றம் காணலாம்.
பாரிய வளர்ச்சி
இருப்பினும், தற்போது யாழ்ப்பாணமானது இலங்கையில் பாரிய வளர்ச்சிபெற்ற பொருளாதார தளமாக பெருமளவில் மாற்றம் கண்டு வருகின்ற நிலையில் இதனுடன் தொடர்புடைய மாற்றங்களையும் நாம் காணக்கூடியதாகவுள்ளது.
அத்தோடு, அனைவருக்கும் செவிசாய்க்கும் அளவில் மக்களும் இல்லை, அவர்கள் தெளிவாக உள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு அரசியல், புலம்பெயர் தொழிலாளர்களின் முதலீடு, தற்போதைய அரசியல் களம் மற்றும் தொழில் முனையும் இளைஞர் சமுதாயம் தொடர்பில் துமிலன் சிவராஜா மேலும் தெரிவித்த சுவாரஸ்யமான கருத்துக்களை காண கீழுள்ள நேர்காணலை பார்வையிடுங்கள்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |