நாடாளுமன்றில் கோமாளிகளின் தலைவர் - வெளியில் ஜனநாயக சர்வாதிகாரியாக ரணில்!
"மக்களின் உரிமைகளை தடுத்து பயங்கரவாதத்தை விதைப்பதற்கு ரணில் விக்ரமசிங்க முயற்சி செய்கிறார்.
நாட்டில் இன்று இடம்பெறுகின்ற பல செயல்பாடுகளுக்கு ரணில் விக்ரமசிங்கதான் முதன்மை காரணமாக திகழ்கிறார்."
கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை விதைக்கும் ரணில்
மேலும் அவர்,
தன்னை ஒரு ஜனநாயகவாதியாக வெளியில் காட்டிக்கொண்டு உள்ளுக்குள் சர்வாதிகாரியாக செயல்படுபவர் ரணில்.
நாடாளுமன்றத்தில் உள்ளவர்களுக்கு ஒரு கோமாளிகளின் தலைவராகவும், வெளியிலே ஜனநாயக சர்வாதியாகவும் தன்னுடைய அராஜகத்தை காட்டிக்கொண்டிருக்கிறார்.
குறிப்பாக மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கு இடைக்கால தடை உத்தரவுகளையும், நீதிமன்ற தடை உத்தரவுகளை பிறப்பிப்பதன் மூலம் நாட்டிலே பேசுகின்ற உரிமையையும், இவ்வாறு தடுத்து தனது சர்வாதிகாரப் போக்கை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்." இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)