நீதிபதிகளை விசாரணைக்கு உட்படுத்தினால் சர்வதேச அழுத்தங்களை அரசாங்கம் எதிர்கொள்ளும்!
"உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையுத்தரவை ஆளும் கட்சியினர் நாடாளுமன்ற சிறப்புரிமை மூலம் விமர்சனம் செய்வது முற்றிலும் தவறானது."
இவ்வாறு, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அழுத்தங்களை அரசாங்கம் எதிர்கொள்ளும்
"நீதிபதிகளை நாடாளுமன்ற சிறப்புக்குழுவுக்கு அழைத்து அவர்களை விசாரணை செய்வது நாட்டில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
நீதித்துறையை சவாலுக்குட்படுத்தி அரசியலமைப்பை மலினப்படுத்துவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.
உள்ளூராட்சித் தேர்தல் குறித்து உயர் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ரிட் மனுக்கலை இடைநிறுத்த வேண்டும்.
வழக்குகள் தொடர்பான கட்டளையை பிறப்பிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது.
நீதிபதிகள் விசாரணை செய்யப்பட்டால் சர்வதேச அழுத்தங்களை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டி வரும்." இவ்வாறு பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
