புதிய பயங்கரவாத தடைச் சட்டம் - அரச மிலேச்சத்தனத்தை அடையாளப்படுத்துகின்றது!
"அரசாங்கம் என்ன கூறினாலும் அரசாங்கம் உருவாக்கியுள்ள புதிய பயங்கரவாத தடைச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர அரசாங்கம் தயாராகின்றது.
அதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறும் பல சரத்துக்களை முன்வைக்க திட்டமிட்டுள்ளது."
இவ்வாறு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சஜித் காட்டம்
மேலும் அவர்,
"சட்டமூலத்தை மீளப் பெற்றதாக சர்வதேசத்திடம் கூறினாலும் இது ஒரு தற்காலிக இடைநிறுத்தம், மக்களை வாழ வைப்பதற்கு பதிலாக மக்களை அடக்க மாத்திரமே இந்த அரசு தெரிந்து வைத்துள்ளது.
தேர்தலுக்கு பயந்து தேர்தலை நிறுத்துவதற்காக இந்த அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
மக்களின் சர்வஜன வாக்குரிமையை இல்லாதொழிக்க செயற்படுவதோடு, மக்கள் தமது உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராடுவதை தடுப்பதற்கும், எதிர்க்கட்சியினரை அடக்குவதற்கும் பல சட்டங்களை கொண்டுவர அரசாங்கம் முனைகிறது.
இது அரச மிலேச்சத்தனத்தை அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது." இவ்வாறு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
