திடீரென வந்த கோட்டாபயவின் அழைப்பு! முடிவை ஏற்கத் தயங்கிய அமைச்சர்

Ali Sabry Gotabaya Rajapaksa Sri Lanka
By pavan Dec 08, 2023 09:09 AM GMT
Report

கோட்டாபய ராஜபக்ச சிறிலங்காவின் அதிபராக இருந்த காலப்பகுதியில், அலி சப்ரிக்கு நீதியமைச்சு பதவியை வழங்க வேண்டாம் என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவருக்கு வலியுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் இடம்பெற்றவுடன் புதிய அமைச்சரவை நியமனத்துக்காக 2020.08.11 ஆம் திகதி கண்டிக்கு சென்று இரவு அங்குள்ள ஹோட்டலில் தங்கியிருந்தோம்.

ரணிலை சந்தித்த உலக தமிழர் பேரவை (படங்கள்)

ரணிலை சந்தித்த உலக தமிழர் பேரவை (படங்கள்)

அலி சப்ரிக்கு நீதியமைச்சு பதவி

நான், விமல் வீரவன்ச, டலஸ் அழகபெரும, மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் அறையில் பேசிக் கொண்டிருந்த போது கோட்டாபய ராஜபக்ச எனக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து உதய, அலி சப்ரிக்கு நீதியமைச்சு பதவியை வழங்குவதற்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

நீங்கள் அலி சப்ரியுடன் பேசுங்கள். அவர் இணக்கம் தெரிவித்தால், கைத்தொழில் அமைச்சை அவருக்கு வழங்கலாம், நீதியமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்கலாம்' என்றார்.

திடீரென வந்த கோட்டாபயவின் அழைப்பு! முடிவை ஏற்கத் தயங்கிய அமைச்சர் | Political Crisis Lanka Gottabaya Govt

நான் இவ்விடயம் தொடர்பில் அலி சப்ரியிடம் அப்போதே பேசினேன் அதற்கு அவர் ' நான் அரசியல்வாதி அல்ல, கிடைக்கும் அனைத்து அமைச்சு பதவிகளையும் வகிப்பதற்கு. நீதித்துறையில் சேவையாற்றியுள்ளேன். ஆகவே நீதிக்கட்டமைப்பில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் பல உள்ளன.

அதனால் தான் நீதியமைச்சுக்கு இணக்கம் தெரிவித்தேன். அமைச்சு பதவி இல்லை என்றால் நான் முரண்பட போவதில்லை. அமைச்சு இல்லை என்றால் இப்போது கொழும்புக்கு செல்கிறேன். பிரச்சினை இல்லை 'என்றார்.

இலங்கை குறித்து கனடாவின் நிலைப்பாடு இதுதான் : வெளிவிவகார அமைச்சர்

இலங்கை குறித்து கனடாவின் நிலைப்பாடு இதுதான் : வெளிவிவகார அமைச்சர்

சிங்கள சமூக எதிர்ப்புகள் 

இதன் பின்னர் நான் கோட்டபய ராஜபக்சவுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து ' அமைச்சரவையில் வேறு முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளார்களா என்று வினவினேன். அதற்கு அவர் இல்லை என்றார்.

அவ்வாறாயின் நீதியமைச்சராக அலி சப்ரியை நியமியுங்கள். அவர் இனவாதியோ, மோசடியாளரோ அல்ல. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அவர் தலையிடமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆகவே அவரை நீதியமைச்சராக நியமியுங்கள். சிங்கள சமூகத்திடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தால் அதை நான் சமாளித்துக் கொள்கிறேன்' என்றேன்.

திடீரென வந்த கோட்டாபயவின் அழைப்பு! முடிவை ஏற்கத் தயங்கிய அமைச்சர் | Political Crisis Lanka Gottabaya Govt

இதன் பின்னரே அவர் நீதியமைச்சராக நியமிக்கப்பட்டார் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி, உண்மையை நீங்கள் குறிப்பிட்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் இனத்தையோ,மதத்தையோ அடிப்படையாக கொண்டு அரசியலில் ஈடுபடவில்லை. ஒட்டுமொத்த மக்களுக்காகவே அமைச்சு பதவியை வகிக்கிறேன்.

இலங்கையர் என்ற அடிப்படையில் செயற்படுகிறேன். நாட்டுக்கு எதிராக எந்நிலையிலும் செயற்படமாட்டேன். அவ்வாறான நிலை தோற்றம் பெற்றால் பதவி துறப்பேன் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025