இலங்கையர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசின் திட்டம்! தென்னிலங்கையில் ஒன்றுதிரண்ட போராட்டக்காரர்கள் - முடங்கியது போக்குவரத்து(படங்கள்)
சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து அண்மைய நாட்களில் நாடளாவிய ரீதியில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த பின்னணியில், இலங்கையில் அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம் குறைக்கப்பட வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும், வரிச்சுமை தளர்த்தப்பட வேண்டும், உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து இன்று கொழும்பின் புறநகரான நுகேகொட பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆரப்பாட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
தேசிய வளங்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்து, அநீதியான சுமையை குறை, மக்களை வதைக்கும் வெறிபிடித்த ஊழல்மிக்க ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம், போன்ற பதாகைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக நுகேகொட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |