அனுர , ரணில் ஒப்பந்தம்! அம்பலமானது தேர்தல் வியூகம்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜே.வி.பி.க்கும் இடையில் தெளிவான அரசியல் ஒப்பந்தம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரிப்பதில் எரிபொருள் விலை அதிகரிப்பு, மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு மற்றும் நீர்க் கட்டணம் அதிகரிப்பு என்பன பிரதான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
மின் கட்டண அதிகரிப்பு
இந்த அதிகரிப்புடன், நாட்டின் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் அதிகரிக்கின்றன. அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை 300 வீதத்தால் அதிகரிப்பதோடு, மிகக் குறைந்த வீதமான 20 வீதத்தினால் மின் கட்டணத்தைக் குறைத்துள்ளது.
70, 80களில் வீடுகளுக்கு மின்சாரம் கிடைத்து மகிழ்ச்சியில் இருந்த நாட்டு மக்கள் மின்கட்டணம் கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நவீன உலகத்தை நோக்கி நகர்வதற்குப் பதிலாக, நாடு மீண்டும் வண்டி யுகத்திற்குப் போய்விட்டது.
மின் கட்டணம் குறையும் என மக்கள் எதிர்பார்த்தனர். அரசு மின்கட்டணத்தை உயர்த்தும் போது, அதிக சதவீதம் அதிகரிக்கிறது. ஆனால் அதை குறைக்கும் போது மின் கட்டணம் மிகக் குறைந்த சதவீதமே குறைக்கப்படுகிறது.
அனுர , ரணில் அரசியல் ஒப்பந்தம்
மேலும், நாட்டின் பெரும்பாலான பொது மக்கள் தங்கள் வாகனங்களுக்கு டீசல் மற்றும் 92 ஒக்டேன் பெட்ரோல் பயன்படுத்துகின்றனர். ஆனால் டீசல் மற்றும் 92 ஒக்டேன்பெட்ரோலின் விலையை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
அதேவேளை, ரணில் விக்ரமசிங்கவும் ஜே.வி.பியும் இணைந்து செயற்படுகின்றனர்.
ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜே.வி.பியும் செயற்பட்டு வருகின்றது. ரணில் விக்ரமசிங்கவும், ஜே.வி.பியும் மேடைகளில் அவதூறாகப் பேசப்பட்டாலும் கைகோர்த்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஜே.வி.பிக்கும் இடையே தெளிவான அரசியல் ஒப்பந்தம் உள்ளது. அனுர ரணில் ஒரு அரசியல் ஒப்பந்தம் எனவும் அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |