இனம் சார்ந்து போராடக் கூடிய அரசியல் தலைவர்கள் எவருமில்லை! மனம் திறந்தார் பாஸ்கரன் கந்தையா
ஈழத்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கக் கூடிய சம்பவங்களைப் பார்க்கும் போது எதிர்கால இனத்தினுடைய இருப்பிற்கு ஆபத்தான விடயமாக பார்க்கின்றேன் என இளம் தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா (Baskaran Kandiah) தெரிவித்துள்ளார்.
தமிழின விடுதலைக்காக 60ஆண்டுகள் இரட்டைவழிப் போராட்டம் இடம்பெற்றது. இந்த நிலைமை இன்னும் 100 ஆண்டுகளில் இருக்குமா என்பது சந்தேகம் தான்.
எங்களுடைய தமிழ் அரசியல் ஒரு சாக்கடை. எங்களுடைய அரசியல் தலைவர்கள் குறிக்கோள் இல்லாதவர்கள். இனம் சார்ந்து - மண் சார்ந்து - தேசியம் சார்ந்த - சிந்திக்கக் கூடிய தலைவர்கள் யாருமே இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “நக்கீரன் சபை” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொலியில்,
இதனுடைய முன்னைய செவ்வியின் காணொலி
