பாதாள உலக கும்பலுடன் தொடர்பு: கிழியப்போகும் எட்டு முன்னாள் அமைச்சர்களின் முகத்திரைகள்!
கெஹெல்பத்தர பத்மே மற்றும் குடு சலிந்து உள்ளிட்ட ஐந்து பாதாள உலக நபர்களுடன் ஆரம்பகால தொடர்புகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் எட்டு முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல கலைஞர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தொலைபேசி பதிவுகளை பகுப்பாய்வு செய்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புலனாய்வு கண்காணிப்பு
அத்துடன், இந்த பாதாள உலக நபர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் அரசு அதிகாரிகள் குழுவையும் புலனாய்வாளர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருதவாக தெரிவருகிறது.
இந்நிலையில், இந்த பாதாள உலக நபர்களுக்கும் பல அரசியல்வாதிகளுக்கும் இடையிலான பல ஆரம்பகால தொடர்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
ஐம்பது கூட்டாளிகள் தப்பியோட்டம்
மேலும், ஐந்து முக்கிய பாதாள உலக நபர்கள் கைது செய்யப்பட்ட பின்னர், மற்றைய ஐந்து முக்கிய பாதாள உலகத் தலைவர்களும், அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த கிட்டத்தட்ட ஐம்பது கூட்டாளிகளும் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறிவிட்டதாக உயர் காவல்துறை வட்டாரங்களிலிருந்து அறியப்படுகிறது.
இதேவேளை, இந்த ஐந்து பாதாள உலக நபர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் மேலும் மூன்று பாதாள உலகத் தலைவர்கள் வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, இவ்வாறு தப்பிச் சென்ற பாதாள உலக நபர்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
