கெஹெல்பத்தரவுடன் தொடர்பை பேணிய ராஜபக்சர்களின் சகா தப்பியோட்டம்! தேடுதல் வேட்டை தீவிரம்
மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் இரசாயனக் களஞ்சியத்திற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி தொடர்பு பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த இரசாயனங்கள் நுவரெலியாவில் வீடு வாடகைக்கு எடுத்து இரண்டு பாகிஸ்தான் நாட்டவர்களுடன் ஐஸ் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பாதாள உலக தலைவர் கெஹல்பத்தர பத்மேவினால் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாகும்.
“பாக்கோ சமன்” என அழைக்கப்படும் சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணை நடத்தியதன் தொடர்ச்சியாக மேற்குக் மாகாண வடக்கு குற்றப்பிரிவு இந்த சோதனையை மேற்கொண்டிருந்தது.
மொட்டுவின் உறுப்பினர்
இதன்படி, இந்த இரசாயனக் களஞ்சியத்தை மறைத்ததில் சம்பத் மனம்பேரி மற்றும் அவரது சகோதரர் பியால் மனம்பேரி ஆகியோர் தொடர்புடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அங்குணுகொலபெலஸ்ஸவைச் சேர்ந்த பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி மற்றும் பியால் மனம்பேரி சகோதரர்கள் இந்த ரசாயனங்களை மறைத்ததற்குப் பொறுப்பேற்றுள்தாக கூறப்படுகிறது.
தேடுதல் வேட்டை
இந்த நிலையில், சந்தேகநபர்கள் இருவரும் காவல்துறை விசாரணைகள் தீவிரமடைந்ததை அறிந்து, இரசாயனக் கையிருப்பை “பூம் டிரக்” மூலம் மீத்தெனிய வீடு நோக்கி எடுத்துச் சென்றதாக நம்பப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், சம்பத் மற்றும் பியல் மனம்பேரி ஆகிய சந்தேகநபர்கள் இருவரும் தற்போது தப்பிச் சென்றுள்ளதையடுத்து, அவர்களை கைது செய்வதற்கான விசேட வேட்டையை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
