பிள்ளையானால் கோட்டாபயவிற்கு ஏற்பட்ட பதற்றத்திற்கு கிடைத்த பதில்
கடந்த சில நாட்களாக தென்னிலங்கை மற்றும் தமிழ் தரப்பு அரசியல் களத்தில் பிள்ளையானின் கைது மற்றும் அவருக்கு வழக்கறிஞராக உதய கம்மன்பில களமிறங்கியுள்ளமை என்பது பாரிய அதிர்வலையை கிளப்பியுள்ளது.
கடந்த எட்டாம் திகதி மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் பிள்ளையான் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
2006 ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவம் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், 72 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது.
இதன்பின், கடந்த 12 ஆம் திகதி பிள்ளையானை மேலும் விசாரிக்க 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) காவல்துறையினர் தெரிவித்திருந்தினர்.
இதன் பின்னணயில் பிள்ளையான் தரப்பில் வழக்கறிஞராக உதய கம்மன்பில களமிறங்கிய நிலையில், கடந்த 15 ஆம் திகதி குற்றபுலனாய்வு திணைக்கள் அதிகாரிகள் முன்னிலையில் இருவருக்கும் இடையில் உரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இதில் கண்ணீர் மல்க பிள்ளையான் வாக்குமூலம் அளித்ததாக உதய கம்மன்பில கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்த விவகாரம் தீயாய் பரவியதுடன் பரதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.
இவ்வாறு, உதய கம்மன்பில கருத்து, பிள்ளையானின் வாக்குமூலம், இடம்பெற்ற அரசியல் நகர்வு, பிள்ளையானின் அரசியல் எதிர்காலம் மற்றும் கைதின் முக்கிய காரணி என்பவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
