ஈழத்தமிழர்களின் தமிழ் தேசியத்தை முற்றாக புதைக்க காய் நகர்த்தும் அநுர அரசு
ஈழத்தமிழர்களின் தமிழ் தேசியத்தை இல்லாமல் செய்வதுதான் தற்போதைய அரசின் ஒரே குறிக்கோள் என அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு (M. Trinavukarasu) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) பிரதானமாக இரண்டு சவால் உள்ளது.
இதில் முதலாவதாக பாக்கு நீரினை ஊடாக ஈழத்தமிழர்கள் இந்தியாவுடனும் (India) மற்றும் இந்திய தமிழர்களுடனுமான தனது உறவை வளர்த்துக்கொள்வதை தடுப்பது, இதிலிருந்து தமிழர்களை இந்தியாவிலிருந்து பிரிப்பது இவர்களுக்கு ஒரு சவால்.
மற்றொன்று, இவ்வாறு பிரிக்கப்படும் யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் வன்னி (Vanni) ஆகிய பிரதேசங்களை கொழும்புடன் (Colombo) இணைப்பது அவர்களுக்கு சவால்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மக்கள் மீதான அநுரவின் கரிசனை, வரவு செலவு திட்டத்தில் தமிழர்களுக்கான பங்கீடு, தமிழ் மக்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ந்து வரும் பாதாள உலக கும்பின் பின்னணி என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
