அடியோடு சரிந்த ராஜபக்சாக்களின் கோட்டை : தடம் தெரியாமல் அழிந்த அரசியல் சாம்ராஜ்யம்
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் அதை அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை உள்ளடக்கிய கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி படுதோல்வியை சந்தித்த நிலையில் தற்போது நான்கு ஆண்டுகளில் நிலமை தலைகீழாக மாறியுள்ளது.
அனுரா குமார திசாநாயக்க ஜனாதிபதியானதோடு நாடாளுமன்றத்தையும் மிகப்பெரிய பெருபான்மையோடு கைப்பற்றியுள்ளார்.
அரசியல் எதிர்காலம்
இருப்பினும், இந்தமுறை ராஜபக்சாக்களின் கட்சிக்கு மூன்று இடங்களே கிடைத்துள்ள நிலையில் அவர்களின் அரசியல் எதிர்காலம் குறித்தும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்க்கலாம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
இலங்கை வரலாற்றில் ராஜபக்ச குடும்பத்தினருக்கு நீண்டகால வரலாறு உண்டு, மகிந்த ராஜபக்சவின் தந்தையான டான் ஆல்வின் ராஜபக்ச 1947 இல் நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.
இதையடுத்து, அவர் இறந்த உடன் தனது 21 ஆவது வயதில் சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைத்து அரசியலிருக்குள் வந்த மகிந்த படிப்படியாக உயர்ந்து 2005 ஆம் ஆண்டில் இலங்கையின் ஜனாதிபதியானார்.
அத்தோடு, அவரது சகோதரர் கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பு செலாளாராக நியமிக்கப்பட்டார்.
உள்நாட்டு போர் முடிவு
2009 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தபோது இவர்களின் செல்வாக்கு உச்சத்தை தொட்டிருந்த நிலையில் அதற்கு அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரிய வெற்றி, அடுத்து 2015 தேர்தலில் தோல்வி, மீண்டும் 2019 இல் வெற்றி என தொடர்ந்து இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தியது ராஜபக்ச குடும்பம்.
ஆனால், 2020 ஆரம்பமான கொரோனா பரவல் அதனை தொடர்நத பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய எடுத்த முடிவுகள் நாட்டை மிகப்பெரிய சிக்கலுக்குள் தள்ளின.
இதையடுத்து, உருவான மாபெரும் மக்கள் போராட்டத்தினால் மகிந்த ராஜபக்சவும் மற்றும் கோட்டபாய ராஜபக்சவும் பதவி விலக நேரிட்ட நிலையில் அவர்களது செல்வாக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது.
இதன்பின், நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவினால் ஓரளவு நாட்டை கட்டியெழுப்ப முடிந்தாலும் பொருளாதார விலைவாசி அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மையும் தொடர்ந்தது.
தேர்தலில் படுத்தோல்வி
இந்தநிலையில்தான், மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் புதிய ஜனநாயக முன்னணி ஆகியவை அடுத்தடுத்த தேர்தலில் படுத்தோல்வியை சந்தித்துள்ளன.
இவ்வாறு 70 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசியலில் ஈடுபட்டு வந்த ராஜபக்ச அரசியல் சாம்ராஜ்யம் முற்றாக வீழ்த்தப்பட்டுள்ளது.
அநுர குமாரவின் அரசு சிறப்பாக செயல்படாமல் விட்டாலும் அடுத்த வாய்ப்பு சஜித்திற்கு செல்லுமே தவிர ராஜபக்சவின் குடும்பத்தினருக்கு அரசியல் வாய்ப்பு கிடைப்பது கேள்வுக்குறியே.
ஆனால் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்தவர்கள் இந்த கருத்துக்களை புறந்தள்ளுவதுடன் இது குறித்து சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினரான மிளிந்த ராஜபக்ச ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அரசியலில் இருந்து ஓய்வு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2015 இலும் இதே போல ஒரு பின்னடைவை சந்தித்து மீண்டு வந்துள்ளோம்.
தாங்கள் மட்டுமே தோல்வி அடைந்தது போல சித்தரிப்பது சரி அல்ல, இந்த தேர்தல் தோல்வியால் ராஜபக்ச குடும்பத்தினர் அரசியலை விட்டு விலகி விட மாட்டார்கள்.
மகிந்த ராஜபக்ச மற்றும் சமல் ராஜபக்சவும் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் நாமல் ராஜபக்ச கட்சியை தொடர்ந்து முன்னெடுத்து செல்வார்” என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு 20 அரசியல் சாம்ராஜ்யம் தற்போது தடம் தெரியாமல் வீழ்ந்துள்ள நிலையில் ராஜபக்சாக்களின் அரசியல் எதிர்காலம் என்பது மீள்கட்டியெழுப்படுவது பெரிய கேள்விக்குரிக்குரிய விடயமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |