யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா!
Thai Pongal
Jaffna
University of Jaffna
By Kajinthan
யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக மற்றும் முகாமைத்துவ பீடத்தில் தைப்பொங்கல் விழா நடைபெற்றது.
3ஆம் வருட வியாபார முகாமைத்துவமானி வெளிவாரி மாணவர்களின் ஏற்பாட்டில் இன்றையதினம் (25.01.2026) குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பாரம்பரிய முறைப்படி கோலமிட்டு, தோரணம் கட்டி, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்திற்கு முன்பாக பொங்கல் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
பொங்கல் நிறைவுற்றதும் சூரியனுக்கு படையல் வைத்து, பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த பொங்கல் விழாவில் வியாபார முகாமைத்துவமானி முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் அணி மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்