பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்..!

Thai Pongal Tamils Tamil
By Shadhu Shanker Jan 14, 2024 09:25 AM GMT
Report

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப தை பிறந்தவுடனேயே சுப நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கிவிடும்.

தை மாத ஆரம்பத்திலேயே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கம் தமிழர் மரபில் உண்டு.

சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. இதற்கமைய நாளைய தினம் தமிழர்களால் தைபொங்கல் கொண்டாடப்படவுள்ளது.

மலரவிருக்கும் தைத்திருநாள்: சூரியனின் பெயர்ச்சியால் 12 ராசிக்கார்களுக்கும் என்னென்ன பலன்கள்

மலரவிருக்கும் தைத்திருநாள்: சூரியனின் பெயர்ச்சியால் 12 ராசிக்கார்களுக்கும் என்னென்ன பலன்கள்

தை முதல் நாள் 

அந்த வகையில் சூரியபகவான் மகர ராசிக்குள் பெயர்ச்சியாகும் தை முதல் நாளை சூரியனை வழிபட உகந்த நாளாகக் கொண்டாடுகிறோம்.

பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்..! | Pongal Good Time Rasi Palan Thai Tamil Horoscope

விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பவர் சூரிய பகவான் என்பதற்கிணங்க சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடாப்படுகின்றது.

பொங்கல் வழிபாடு என்பது ஒரு நாள் வழிபாடு மட்டுமல்ல. பொங்கலுக்கு முன்தினமான மார்கழி மாதத்தின் கடைசி நாளும் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற நம்பிக்கைக்கமைய இது கொண்டாடப்படுகின்றது.

விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சாணக்கியன்

விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சாணக்கியன்

பொங்கலன்று செய்ய வேண்டியவை

பொங்கல் பண்டிகை அன்று சூரியனை வணங்கிப் பொங்கல் வைத்து கரும்பு, பழங்கள், வெற்றிலை பாக்கு ஆகியன வைத்து வழிபட வேண்டும்.

பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்..! | Pongal Good Time Rasi Palan Thai Tamil Horoscope

சூரிய ஒளிபடும் ஏதேனும் ஓரிடத்தில் இந்த வழிபாட்டைச் செய்வது மிகவும் சிறப்புக்குரியது. பூஜை செய்யும் இடத்தில் சந்திர, சூரியர்கள் கோலம் இட்டுக்கொள்ள வேண்டும்.

பொங்கல் பானையை நடுவே வைத்து சூரியனுக்கு தீபாராதனை காட்டிப்பின் நிவேதனம் செய்ய வேண்டும்.

பொதுவாக சர்க்கரைப் பொங்கல் செய்வதுவே வழக்கம். சில வீடுகளில் வெண்பொங்கலும் சேர்த்து செய்வார்கள்.

பொங்கல் வைக்க உகந்த நேரம்

நாளையதினம் எந்த தினத்தில் பொங்கல் வைக்கலாம் என பார்க்கலாம்.

பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்..! | Pongal Good Time Rasi Palan Thai Tamil Horoscope

நாளை காலை 07.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலமும், 10.30 முதல் 12 வரை எமகண்டமும் உள்ளதால் அதை தவிர்த்து, மற்றைய நேரத்தில் வைக்கலாம். காலை 06.30 முதல் 07.30 வரை அல்லது காலை 09.30 முதல் 10.30 வரை பொங்கல் வைக்கலாம்.

அடுத்த நாள் (ஜனவரி 16) காலை 11 மணி முதல் பகல் 01 மணி வரை மாட்டுப் பொங்கல் வைக்கலாம். இவ்வாறு பொங்கல் வைப்பதன் மூலம் சூரியனின் அருளும், செல்வ செழிப்பும் கிடைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்