'பொன்னியின் செல்வன்' - விடுதலைப் புலிகளின் தலைவர் கூறிய பதில் - காலம் கடந்து வெளிவரும் தகவல்
பொன்னியின் செல்வன் - 1
கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகம் ஐந்து பகுதிகளைக் கொண்டது. படிக்க படிக்க விறுவிறுப்பு கொண்டது.
பல கால கட்டங்களில் பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க பல முயற்சிகள் நடந்தாலும், இறுதியாக இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பல முக்கியமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் தான் பெரிய பழுவேட்டரையர்.
பெரிய பழுவேட்டரையர்
வயதானவர், நந்தினி அழகில் மயங்கிப் போனவர், நந்தினியின் வார்த்தைப்படி மட்டுமே நடப்பவர், அரசாங்கத்துக்கு துரோகம் செய்தவர், உத்தம சோழனை அரசனாக்க பல சூழ்ச்சி செய்தவர், சுந்தர சோழனை வீழ்த்த சில குறுநில மன்னர்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவர்.
இப்படியாக பல குற்றச்சாட்டுகள் பெரிய பழுவேட்டரையர் மீது உண்டு.
பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்த அனைவரிடமும் அதில் உள்ள கதாபாத்திரங்களில் யாரைப் பிடிக்கும் என்று கேட்டால், பலரும் வந்தியதேவன், குந்தவை, அருண்மொழிவர்மன், ஆதித்த கரிகாலன் என்று சொல்வார்கள்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் கேட்டால் அவர் சொல்லும் பதில் பெரிய பழுவேட்டரையர் தான்.
அவரின் பதிலுக்கு பின்னால் உள்ள விடயங்களை அலசுகிறது இந்தக் காணொளி,
தொடர்புடைய காணொளிகள்
