ஏழைத் தாயின் ஒருமாத நீர் கட்டணம் எவ்வளவு தெரியுமா..! அவருக்கே ஏற்பட்ட அதிர்ச்சி
மாதாந்தம் சுமார் ஆயிரம் ரூபா தண்ணீர்க் கட்டணம் அறவிடப்பட்டுவந்த நிலையில் ஹுங்காம வீடொன்றுக்கு கடந்த மாதம் 75,000 ரூபா நீர்க் கட்டணம் கிடைத்ததாக குறித்த வீட்டில் வசிக்கும் டபிள்யூ.எச் கெருட்டி என்ற பெண் தெரிவித்தார்.
குளிப்பதற்கும், குடிப்பதற்கும் மட்டுமே நீரை எடுத்துச் செல்வதாகவும், அதற்கு 4 யூனிட் செலவாகும் என்றும் அவர் கூறினார்.
தண்ணீர் கட்டணம் எழுதுபவர்
கடந்த 11ஆம் திகதி தண்ணீர் கட்டணம் எழுதுபவர் வீட்டிற்கு வந்து தண்ணீர் கட்டணத்திற்குரிய சிட்டையை கொடுத்ததாக கூறினர். அதில் தண்ணீர் கட்டணம் 75000 ரூபாய் என்பதை அறிந்ததும் தனது இருப்பிடத்தை மறந்துவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், நாங்கள் கூலித் தொழிலாளிகளாக வாழ்கிறோம், எங்களுக்கு வீடு, கதவு இல்லை. குடிநீர் கட்டணத்தில் 800 யுனிட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
அலுவலகத்தில் முறைப்பாடு
ஹங்கம ஹதகல நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பராமரிப்பு அலுவலகத்தில் பெண் முறைப்பாடு செய்துள்ளார். இதுபற்றி பொறுப்பதிகாரி தெரிவிக்கையில், புகார் குறித்து விசாரணை நடத்த நேரில் வீட்டுக்குச் செல்வதாக தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |