போராட்ட களத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்! - பாப்பரசர் அனுப்பிய செய்தி
இலங்கையில் உள்ள பொதுமக்களின் அபிலாஷைகளுக்கு செவி கொடுக்குமாறு பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் வலியுறுத்தியுள்ளார்.
மக்களுக்காக பிரார்த்தனை, சமாதானத்தை வேண்டுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
குறிப்பாக "சமீபத்திய காலங்களில் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார சவால்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் இளைஞர்களுக்கு" தனது வாழ்த்துக்களை அனுப்புவதாக பாப்பரசர் கூறினார்.
"வன்முறைக்கு அடிபணியாமல், அமைதியான அணுகுமுறையைப் பேணுமாறு அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்துவதில் நான் மத அதிகாரிகளுடன் இணைந்துகொள்கிறேன்."
எதிர்ப்பாளர்களின் குரல்களுக்கு செவிசாய்க்குமாறு இலங்கையின் ஆளும் அரசியல் தலைவர்களுக்கும் பாப்பரசர் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
"மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்கவும், மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளுக்கு முழு மரியாதையை உறுதிப்படுத்தவும் பொறுப்புகள் உள்ள அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
