பாப்பரசர் பிரான்சிஸ் கவலைக்கிடம் : வத்திக்கானிலிருந்து வெளியான அறிவிப்பு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாகியும், பாப்பரசர் பிரான்சிஸ் ஓய்வில் இருக்கிறார், ஆனால் சுவாசம் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளால் "ஆபத்தான நிலையில்" இருக்கிறார் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.
பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மூச்சுக்குழாயில் அழற்சி, சிறுநீரகப் பிரச்சனை இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது.
ஜெமிலி மருத்துவமனையில் சிகிச்சை
இதையடுத்து, ரோம் நகரில் உள்ள ஜெமிலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நிமோனியா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பாப்பரசர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்,
சுய நினைவுடன் இருந்தாலும், உடல்நிலை கவலைக்கிடம்
'புனித தந்தை சுய நினைவுடன் இருந்தாலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 'மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து செயற்கை முறையில் ஒக்சிஜன் செலுத்தப்படுகிறது.
இரத்த அணுக்கள் குறைந்து வருவதால், அதற்கான சிகிச்சையும் தரப்படுகிறது. அதிக வலியை அவர் அனுபவித்து வருகிறார்' என கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
