பாப்பரசர் மறைவுக்கு பின் உலகத்திற்கு பேரழிவு : 450 ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்பால் அச்சம்
கத்தோலிக தலைமை மதகுரு பாப்பரசர் (pope)மறைவுக்குப்பின் உலகத்துக்குப் பேரழிவு என்று சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்ட விடயம் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
‘நாஸ்ட்ரடாமஸ்’ என்றழைக்கப்பட்ட 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த தத்துவ ஞானியும் ஜோதிடருமான மைக்கல் டே நாஸ்ட்ரெடேம், தமது காலத்துக்குப்பின் இந்த உலகில் நடக்கப்போகும் போர்கள், அரசியல் மாற்றங்கள், இயற்கைப் பேரழிவுகள் எனப் பலவற்றை முன்பே கணித்துக் கூறியுள்ளார்.
ஒருவேளை உண்மையாகுமோ என்கிற சந்தேகம்
அவற்றில் பெரும்பாலான விடயங்கள் நடைபெறத் தவறவில்லை என்பதால் பாப்பரசர் குறித்து அவர் கணித்துக் கூறியுள்ள விடயங்களும் ஒருவேளை உண்மையாகுமோ என்கிற சந்தேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது.
அவரின் ஆரூடத்தின்படி, “உலகின் மிக வயதானதொரு பாப்பரசர் மறைவை அடைத்து குறைந்த வயதுடையதொரு ரோமன் அடுத்த பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் அந்த பொறுப்பில் நெடுங்காலம் இருப்பதுடன், அதிக ஈடுபாடுடன் சேவையாற்றுவதையும் காண முடியும்” என கணித்துள்ளார்.
நாஸ்ட்ரடாமஸ் போலவே அயர்லாந்தைச் சேர்ந்த ஆன்மிக ஞானி ‘மலாச்சி’ கணித்துக் கூறியுள்ள விடயங்கள் சற்று அச்சத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளன. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மலாச்சி கணித்துள்ள ஆரூடத்தின்படி,
‘பீட்டர்’ என்ற ரோமன் பாப்பரசராக அமருவார்.
“புனித ரோமன் தேவாலயத்தில் இறுதிக்கட்டமாக, ‘பீட்டர்’ என்ற ரோமன் பாப்பரசராக அமருவார். அவர் தம்மைப் பின்பற்றுபவர்களை பல இன்னல்களிலிருந்து நல்மேய்ப்பராக கடந்து செல்ல உதவுவார். அதன்பின், ஏழு குன்றுகளின் நகரம் அழிவைச் சந்திக்கும். இதுவே முடிவு” என்பதே அவரது கணிப்பு.
இதனைச் சுட்டிக்காட்டும் சிலர், புதிய பாப்பரசர் அதிலும் குறிப்பாக, ‘பீட்டர்’ என்ற பெயருடையவர் தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில், அது, உலக அழிவுக்குக் காரணமாக அமையலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 13 மணி நேரம் முன்
