பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி பங்கேற்ற குருநகர் புனித ஜேம்ஸ் ஆலய திருவிழா
By Sathangani
யாழ். குருநகர் புனித ஜேம்ஸ் தேவாலயத்தில் இன்றைய தினம் (25) நடைபெற்ற ஆலய திருவிழாவில் பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கைக்கான பிரதிநிதி வண.கலாநிதி பிறாயன் ஊடக்கே மற்றும் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வண.கலாநிதி பிறாயன் ஊடக்கே தனது சிறப்புரையை ஆற்றும்போது வடமாகாண ஆளுநரை விழித்து,
ஓர் அடையாளம்

''நான் வருகை தந்த சந்தர்ப்பத்திலே அவர் இங்கே கலந்துகொண்டிருப்பது கத்தோலிக்க திருச்சபையும் அரசாங்கமும் இணைந்து பணியாற்றுவதற்கான ஓர் அடையாளமாக இருக்கின்றது.'' எனக் கூறினார்.
மேலும் தான் வடமாகாணம் பற்றியும் இந்த மக்கள் பற்றியும் நன்கு அறிந்திருப்பதாக கூறிய
பாப்பரசரின் பிரதிநிதி இந்த மக்களின் அன்பு மிகவும் பெரியதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி