உக்ரைனில் “கண்ணீரும் இரத்த ஆறுகளும் ஓடுகின்றன” - ரஷ்யாவை கடுமையாக கண்டித்த பாப்பரசர்
russia
ukraine
war
pope
condem
By Sumithiran
உக்ரைன் மோதல், “ஒரு இராணுவ நடவடிக்கை அல்ல, அது ஒரு போர்,” என்று பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனை “தியாகி நாடு” என்று கூறியவர், “அங்கு கண்ணீர் மற்றும் இரத்த ஆறுகள் ஓடுகின்றன,” என்று குறிப்பிட்டார்.
உக்ரைனின் ராணுவமயமாக்கத்தை இல்லாமல் ஆக்குவதற்காகத் தொடங்கப்பட்ட “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று உக்ரைன் மீதான படையெடுப்பைப் பற்றி வலியுறுத்தும் ரஷ்ய அதிபர் மாளிகையின் அதிகாரபூர்வ கருத்தைக் கண்டிக்கும் வகையில் பாப்பரசரின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
கடந்த வாரம் ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பாப்பரசர் வேண்டுகோள் விடுத்தார். பொதுமக்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி