போதைப்பொருட்களுடன் பிரபல நடிகர் கைது
பிலியந்தலை பகுதியில் உள்ள ஒரு விடுதி அறையில் பிரபல தொலைக்காட்சி நடிகர் உட்பட மூன்று பேர் கொகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்தேகொட காவல்துறையினர் இந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நடிகர் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த பதஞ்சியைச் சேர்ந்தவர், மற்ற சந்தேக நபர்கள் அனுராதபுரம் மற்றும் பிலியந்தலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
அநுராதபுரத்தை சேர்ந்தவர்கள்
கைது செய்யப்பட்ட நடிகர் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த பதஞ்சியைச் சேர்ந்தவர், மற்ற சந்தேக நபர்கள் அனுராதபுரம் மற்றும் பிலியந்தலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் 26 மற்றும் 28 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து அனுராதபுரத்திற்கு போதைப்பொருள் கொண்டு செல்லும் நபர் குறித்து மத்தேகொட காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மத்தேகொட காவல்நிலைய பொறுப்பதிகாரி பிலியந்தலை பகுதியில் உள்ள ஒரு விடுதி அறையை ஆய்வு செய்தார்.
கூரியர் சேவை மூலம் அனுப்பப்பட்ட போதைப்பொருள்
பின்னர், சந்தேக நபர்களுக்கு இந்த போதைப்பொருட்களை விநியோகித்த நபர் குறித்து கிடைத்த தகவலின்படி, பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது மேலும் 255 கிராம் கஞ்சா கலந்த சிப்ஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர், சந்தேக நபர்களிடம் விசாரித்தபோது, கடைசியாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரே இந்த போதைப்பொருட்களை வழங்கியதாகவும், இந்த போதைப்பொருட்கள் கொழும்பிலிருந்து அனுராதபுரத்திற்கு கூரியர் சேவை மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று (17) கெஸ்பேவ நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவிருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |