வாகரையில் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கு மக்கள் எதிர்ப்பு
Sri Lankan Tamils
Sri Lanka Parliament
Pillayan
Sri Lanka Politician
By Kiruththikan
மட்டக்களப்பு - வாகரை - பச்சவட்டை பகுதியில் மீன்வளர்ப்பு திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைக்க சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரக்காந்தனுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள ஏரியில் மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு இராஜாங்க அமைச்சர் தலைமையில் நேற்று இடம்பெறவிருந்தது.
குறித்த பகுதியிலுள்ள மக்கள் இந்த திட்டம் காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து பச்சவட்டை பகுதி மக்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்ததோடு அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
சுமார் 70க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி