கொழும்பு port city யில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் கொலை
Sri Lanka Police Investigation
Death
Port City Colombo
By Sindu
கொழும்பு துறைமுக நகரில் (port city) நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (09) இரவு குறித்த பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர் விடுதிக்கு அருகில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதிலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாக்கப்பட்ட நபர் பலத்த வெட்டுக் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒப்பந்த தொழிலாளர்
இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு துறைமுக நபரில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த பண்டாரவளை பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்